Meesalai Veerasingam Central College

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி

98
Years
Completed

Welcome to Meesalai Veerasingam Central College

அமரர். வேதாரணியர் வீரசிங்கம் என்பவர் மீசாலை பிரதேசத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்குடன் சொந்த வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை மாணவர் தொகை படிப்படியாக அதிகரிக்க இடநெருக்கடி ஏற்பட்டமையால் கண்டி வீதியின் தற்போது பாடசாலை அமைந்துள்ள இடத்தில் விசாலமான கொட்டில்களை அமைத்து பாடசாலையினை தொடர்ந்து நடாத்தி அப் பாடசாலையினை நிர்வகிக்க ஒரு பரிபாலன சபை (அறங்காவலர் சபை) நிறவினார்.
1919 அளவில் வீரசிங்கனார் இயற்கை எய்தினார். அவர் இயற்கை எய்தியதும் பாடசாலை நிர்வாக விடயமனைத்தும் அறங்காவலர் சபையினரே கவனித்து வந்தார்கள். இவர்களது முயற்சியால் 1926 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வீரசிங்கம் சைவ வித்தியாசாலை என்ற பெயருடன் முறையாக ஒரு பாடசாலையாக அமைக்கப்பட்டது.
0

Teachers

0

Students

0

OBA Members

0

Clubs

Greeting From Principal

யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.இக் கல்லூரி 2026ம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவை காணவிருக்கின்ற இந்த வேளையிலே கல்லூரிக்கென இவ் இணையத்தளத்தை வடிவமைத்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். 

இக் கல்லூரி 1AB வகைப் பாடசாலையாக பாடவிதானம் மற்றும் இணைபாடவிதானச் செயற்பாடுகளில் பல வெற்றிகளைப் பெற்று தனக்கென ஒரு தனித்துவத்துடன் செயற்பட்டு வருகின்றது. தமிழர் பண்பாட்டினையும் கலைகளையும் பேணி மாணவர்களின் கல்வியை வகுப்பறையுடன் சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு இணைபாட விதானச் செயற்பாடுகளினூடாக ஆளுமைப் பண்புகளை வளர்த்து வருவதில் கூடுதலான அக்கறை வழங்கப்படுகின்றது.குறிப்பாக அண்மைக் காலத்திலே சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு , மற்றும்  பெண் சாரணர் அணிகள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன.மேலும் இவ் வருடம் ஆங்கிலம் கணிதம் , மற்றும் அழகியல் பாட போட்டிகளில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்று மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர் . 

பாடசாலையின் வினைத்திறனான இயங்குநிலைக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் எமது பழைய மாணவர் சங்கங்களின் ஒருங்கிசைந்த செயற்பாடுகளும் உறுதுணையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.கல்லூரியின் பல்வேறு செயற்பாடுகள் குறித்த தொகுப்பு இந்த இணையத் தளத்தில் உள்ளது. கல்லூரியின் செயற்பாடுகளை அறிந்து அதன் நோக்கங்களை அடைய நீங்களும் எங்களுடன் இணைய அன்புடன் அழைக்கின்றேன்.

Explore Our School

Events

Events

Scroll to Top